திருப்பத்தூர் மாவட்ட நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக கோரிக்கை…!
திருப்பத்தூர்மாவட்டம் நகரப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தற்போது காலியாக இருக்கும் இடத்தினை விரிவாக்கம் செய்தால் பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் பேருந்துகள் பிற வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்று வர ஏதுவாக இருக்கும். மேலும் சாலையின் நடுவில் உள்ள பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை உள்ளது.பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் சாலையை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும். இந்த சாலையின் ஒரு புறம் வணிக வளாகம் இருந்தாலும் மற்றொரு புறம் காலியாகவே உள்ளது.ஆகவே அந்த காலியாக உள்ள பகுதிகளை சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்திடவும். நகரின் முக்கிய பகுதியில் சிக்னல் விளக்குகளை பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் சமூக ஆர்வலர் ராஜீவ் காந்தி நகர செயலர் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்….