திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்…!
திருப்பத்தூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
1)திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்தை சரி செய்ய
2)காவல் நிலையத்தில் அரசியல் கட்சிக்காரர்கள் நடத்திடும் கட்டப்பஞ்சாயத்து சரி செய்ய
3)எஸ்சி.எஸ்டி வன்கொடுமை பாதுகாத்திட 4)பெண்களுக்கான பாலியல் சீண்டலை பாதுகாத்திட
5) கள்ள சந்தையில் மதுபானம் விற்பதை தடுத்திடவும்
6)குட்கா விற்பனை தடுத்திட நடவடிக்கை எடுத்திடக்கோரியும். 7)பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும்
8)முக்கிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைத்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பத்திரிக்கையாளர் முன்வைத்தனர் இவை அனைத்துக்கும் பொறுமையாக பதில் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் மாவட்டம் பற்றி முழுமையாக விவரம் சேகரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் நிருபர்களுக்கு தனது தொலைபேசி எண்ணையும் வழங்கினார். பத்திரிக்கை நிருபர்கள் காவல்துறையோடு ஒத்துழைப்பு நல்குமாரும் கூறினார்.. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைத்தீர்வு முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்..