கும்பகோணம் கும்பேஸ்வரர் மேலவீதியில் உள்ள நாடார் கல்யாண மஹாலில் நடைபெற்ற முப்பெரும் விழா..
கும்பகோணம் கும்பேஸ்வரர் மேலவீதியில் உள்ள நாடார் கல்யாண மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு காமராஜர் இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா,தமிழ்நாடு காமராஜர் இயக்க 20-ம் ஆண்டு விழா,திராவிட தந்தை சின்னத்தம்பி விருது வழங்கல் விழா ஆகிய முப்பெரும்விழா டாக்டர் Rtn.V.C.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகனுக்கு திராவிட தந்தை சின்னத்தம்பி விருதுதினை தொழிலதிபர் RAS.ஆசைத்தம்பி வழங்கினார்கள்.காமராஜரின் திருவுருவப்படத்தினை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.விழாவில் மாநகராட்சி துணை மேயர், மாநகர செயலாளர் சுப.தமிழழகன் மற்றும் தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள்,தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் T..R.லோகநாதன்,வழக்கறிஞர் விவேகானந்தன்,சின்னை பாண்டியன்,நிம்மதி,கந்தசாமி நாடார்,செல்வம்,மேலக்காவேரி கவிஞர் அயூப் கான் மற்றும் நாடார் அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக வழக்கறிஞர் ஆடுதுறை மு.உத்திராபதி, பட்டிமன்ற பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் கவிதா ராம் மோகன், கார்த்திகேயன்,வித்தியா,மனோகரன்,ரஜினிகாந்த் பானுமதி இவர்களுடன்.. கவிஞர் ச.அய்யப்பன் (தலைவர் தமிழ்நாடு காமராஜர் இயக்கம் மாமன்ற உறுப்பினர்) கலந்துகொண்டனர்…..