Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வு கரூர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அரங்கத்தில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 658 சுய உதவி குழுவின் 7631 உறுப்பினர்களுக்கு ₹.50.60 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது.அன்பான சகோதரிகளைச் சந்தித்து உலக மகளிர் தின நல்வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார்…
உடன் கரூர் மாவட்ட ஆட்சியர் எம்.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.