கும்பகோணத்தில் ஜீவானந்தம் அமலநாதன் தவக்கால செய்தி அறிவித்தார்.
கும்பகோணத்தில்
ஜீவானந்தம் அமலநாதன்
தவக்கால செய்தி அறிவித்தார்.
அன்பிற்கினியோரே ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக பயணத்தில் நன்றி உணர்வு, அன்பு,மன்னிப்பு மற்றும் சரணாகதி என்ற உயர் உணர்வு கொண்ட நிலைக்கு இணையானது நமது மன மாற்றம்
திருஅவையில் தவக்காலம் வரமாய் கிடைத்திருக்கும் அறக்காலம் ஆகும். இத்தவக்காலத்தில் சடங்கு, சம்பிரதாயம், வழிபாடு,உண்ணா நோன்பு உடை மாற்றம் மற்றும் திருப்பயணம் போன்ற கொண்ட வழக்கமான வருடாந்திர சுழட்சி முறையோடு முடித்துக் கொள்ளாமல் இதயத்தை கிழித்து கொண்டவர்களாக
(யோவே 2:13)வானக தந்தையின் கைமாறு பெறுவதற்கு(மத் 6:4) ஏற்ற உள்ளார்ந்த மனமாற்ற அறநெறி வாழ்க்கை வாழவே அழைப்பு பெற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தவக்காலத்தில் உளமார்ந்த
உள் உணர்வு கொண்ட நற்செயல்கள் நம்மையும் திரு அவையும்
ஒளிர்விப்பதாக!
தொழுகையில் சில வினாடிகளில்
தொழுகை நிகழ்ந்து விடுகிறது என்று சூபிஞானி ரூமி கூறுவார். நாம் ஜெபத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அதன் முழு நேரமும் நாம் வழிபாடு செய்து விடுவதில்லை ஜெபித்து விடுவதில்லை. சில வினாடிகளில் மனதுருகி இறையை சிந்தித்து நிற்கும்போது வழிபாடு நிகழ்ந்துவிடுகிறது. ஜெபித்தல் நிறைவேறி விடுகிறது.
தவக்காலத்தில்
சில வினாடிகளில் ஒருவருக்கு மன மாற்றம் நிகழ்ந்து விட்டால் அவருக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே நன்மை ஆகும்!
எனவே இத்தவக்காலத்தில் எண்ணங்களை உருவேற்றுவோம் மனங்களை உயிரூட்டுவோம் செயல்களை உயர் வாக்குவோம் என்று கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமல நாதன் சாம்பல் புதனான இன்று தனது தவக்கால செய்தியில் கூறியுள்ளார்.