கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் ஸ்ரீ லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தியாகதுருகம் கவி கம்பன் கழகம் இணைந்து கம்பன் விழா முதல்வர் வே.பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் ஸ்ரீ லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தியாகதுருகம் கவி கம்பன் கழகம் இணைந்து கம்பன் விழா முதல்வர் வே.பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது…
தியாகதுருகம் மு.பெ.நல்லாபிள்ளை, இரா.பாஸ்கரன், நா.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“கம்பன் ஒரு பண்பாட்டுக் கூடாரம்” என்னும் தலைப்பில் ராமநாதபுரம் கம்பன் கழக பொதுச்செயலாளர் மானுட பிரியன் சிறப்புரையாற்றினார்.
பொறியாளர் பெ.புருஷோத்தமன் – கவிஞர்.நா.இளங்கோவன் எழுதிய காலதியானம், சிந்து சமவெளி சின்னங்கள் எனும் நூல்களை
ரிஷிந்தியம் வ.இராசகோபால் திறனாய்வு செய்தார்.
மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கம்பன் கழகத் தலைவர் தொழிலதிபர் எஸ்.எம்.சுலைமான் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
“குடி குடியை கெடுக்கும்” என்னும் தலைப்பில் முருகன் தலைமையில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகளை தியாகதுருகம் கவி கம்பன் கழக நிறுவனர் இரா.துரைமுருகன் தொகுத்து வழங்கினார்…விழா நிறைவில் நா.பெரியசாமி நன்றி கூறினார்….