வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே சிறுத்தை தாக்கி பெண் பலி – மாவட்ட ஆட்சியர்,வருவாய்த் துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை – கிராம மக்கள் அச்சம்…
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே சிறுத்தை தாக்கி பெண் பலி – மாவட்ட ஆட்சியர்,வருவாய்த் துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை – கிராம மக்கள் அச்சம்.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மருச்சி துருவம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகள் அஞ்சலி (22) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
சிவலிங்கத்தின் கிராமம் காப்பு காட்டை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 18.12.24 சுமார் 04:00 மணியளவில் சிவலிங்கத்தின் மகள் அஞ்சலி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது காப்புக்காட்டில் இருந்து வந்த சிறுத்தை அஞ்சலியை தாக்கி காப்புக்காட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளது.
அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த உறவினர்கள் அஞ்சலியை சிறுத்தை கடித்து இழுத்து செல்வதை கண்டு கூச்சலிட்டு சிறுத்தையை விரட்ட முயற்சி செய்துள்ளனர்..
அப்போது பொதுமக்களைக் கண்ட சிறுத்தை அஞ்சலியை காப்புக்காட்டில் விட்டு தப்பி ஓடியுள்ளது…
உடனடியாக உறவினர்கள் அருகே சென்று பார்த்தபோது அஞ்சலியின் கை, கால்கள் மற்றும் பல இடங்களில் சிறுத்தை கடித்ததில் அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கே.வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமத்திற்குள் வந்து சிறுத்தை பெண்ணை தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…