தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை….!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை :
சட்டசபையில் பணிநிரந்தரம் தீர்மானம் கொண்டு வர வேண்டும்:
13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் அரசு நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தற்காலிகமாக வேலை செய்கின்றார்கள்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12,500 ரூபாய் தொகுப்பூதியம் தற்போது வழங்கப்படுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
உடற்கல்வி,ஓவியம், கணினி,தையல்,இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
டிசம்பர் 9 மற்றும் 10 தேதியில் நடக்கின்ற சட்டமன்ற கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் :
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203