கோவை மத்திய மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது…
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு என்கிற தலைப்பில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுர வினியோகம், போஸ்டர் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள் ,நாடகங்கள், பொதுக்கூட்டம் ,பேரணிகள் மற்றும் மனித சங்கலி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது…அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது…
நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் I.காமிலா பானு தலைமை ஏற்று நடத்தினார்,மாவட்ட செயலாளர் பைரோஸ், துணைத் தலைவர் சல்மா,பொருளாளர் மெகருன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்…தொகுதி நிர்வாகிகள்,வார்டு, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்….