உள்ளூர் செய்திகள்மதம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் செல்வமுத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் செல்வமுத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ செல்வமுத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது…. மங்கல வாத்திய இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து அனுஞ்கை, விக்னேஷ்வர பூஜை,வாஸ்து சாந்தி, லெட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன..தொடர்ந்து முதலாம்,இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன….பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டன….யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கலசங்களை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்….கும்பாபிஷேக நேரத்தில் கடவுளின் அருளால் கருடபகவான் கோபுரத்தை சுற்றிவர பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது….தொடர்ந்து பரிவார தெய்வங்களான காக்கார‌ கருப்பர்,சின்னடைக்கி அம்மன்,காப்பிளி தங்காள்,அம்மையான்பட்டியான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன…
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்…இந்நிகழ்ச்சியை காண‌ தூத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்…விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அருட்பிராசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது….பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button