சேலம் மாவட்டம் கல்வராயன்மலையில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR) -பெங்களூர் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டம் – ஐந்திணை மூலம் கல்வராயன்மலை பழங்குடியின விவசாயிகளுக்கான இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் காய்கறி சாகுபடி & மாதிரி வீட்டு தோட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது…!
சேலம் மாவட்டம் கல்வராயன்மலையில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR) -பெங்களூர் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டம் – ஐந்திணை மூலம் கல்வராயன்மலை பழங்குடியின விவசாயிகளுக்கான இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் காய்கறி சாகுபடி & மாதிரி வீட்டு தோட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது… இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் பூங்கொடி சிவராமன் மற்றும் வெங்கடேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்… இப்பயிற்சியில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானிகள் முனைவர் R.செந்தில்குமார் மற்றும் முனைவர் V.சங்கர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மற்றும் மாதிரி வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்து விரிவாக பயிற்சி அளித்தனர்… இப்பயிற்சியின் மூலம் காய்கறி உற்பத்தி அதிகரிக்க
செய்தல், இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதன் மூலம் பழங்குடியின விவசாயிகள் மும்மடங்கு வருமானத்தை ஈட்டுவதற்கான வழி வகுக்குறது மற்றும் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் குடும்பத்திற்கு தேவையான சத்து நிறைந்த காய்கறிகளை உற்பத்தி செய்து அதனை உண்பதன் மூலமாக ஆரோக்கியமான வாழ்வினை பெறலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்… இந்நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார உதவி தோட்டக்கலை இயக்குனர் கலைவாணி,பழங்குடி நலத்துறை கௌரவ ஆலோசகர் முனைவர் பாலு,சேலம் மாவட்ட பூர்வ மலை பழங்குடியினர் சங்க நிர்வாகிகள்,200 கும் மேற்பட்ட விவசாயிகள்,மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்… இறுதியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் உயர் விளைச்சல் தரக்கூடிய ஐந்து வகையான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டன… நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சேலம் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை, கல்வராயன் மலைபூர்வமலை பழங்குடியினர் சங்கம் மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை செய்திருந்தன…