உள்ளூர் செய்திகள்விளையாட்டு

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தியது….

திருவள்ளூர், அயனம்பாக்கம்.
வில்லிவாக்கம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தியது

*2024 – 25 ஆம் ஆண்டிற்கான திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தியது. இப்போட்டிகள் 29.8.2024 ஆவடி சிறப்பு காவல் மையம் 2 இல் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.‌ திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தடகள விளையாட்டு போட்டிகளைத் தலைமை ஏற்று தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரையும்,உரிய அறிவுரைகளையும் கூறினார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் நரசிம்ம ராவ் மாணவர்களுக்கு உரிய வாழ்த்துகளையும் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் தம்முடைய சிறப்பான பேச்சால் எடுத்துரைத்தார். நிகழ்வில் அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் வெ.பாலமுருகன் வரவேற்புரை வழங்கினார்.

விளையாட்டு போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்…
அயனம்பாக்கம் பள்ளியின் சார்பிலும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பார்த்தசாரதி அனைத்து மாணவர்களுக்கும் குடிநீர் வசதி மற்றும் உணவை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் பரந்தாமன் மற்றும் உறுப்பினர் முத்து ஆகியோருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கி மரியாதை செலுத்தினார்…
மேலும் அயனம்பாக்கம் அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் வில்லிவாக்கம் வட்ட அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் சிறப்பாக இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி முடித்தார்கள். குறிப்பாக SKDJ மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஜெகதீஷ் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அயப்பாக்கம் பள்ளியில் பணிபுரியும் முரளிதரன் மிகுந்த சிரத்தையோடு இப்போட்டிகளை நடத்திக் கொடுத்தனர். அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.அனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கலைமகள் மிகுந்த பொறுப்போடும் மிகச்சிறப்பாகவும் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்து உரிய அலுவலர்களிடம் பாராட்டைப் பெற்றனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button