இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்..! திருப்பத்தூர் மாவட்டம் பொதிகை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேச்சு….
- இந்தியாவிலேயே உயர் கல்வித்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்..! திருப்பத்தூர் மாவட்டம் பொதிகை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேச்சு….
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 12ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நிர்வாக இயக்குநர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளாருமான கே.சி.வீரமணி மற்றும் வித்யாமந்திர் உயர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
இந்தியாவிலே உயர் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது எனவும்.,தமிழகத்தில் முதன் முதலாக சுயநிதி பொறியியல் கல்லூரி அமைக்க வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் டி.டி.குமார், முதல்வர் பிரபாகரன்,பொருளாளர் ரமேஷ்குமார், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி