சென்னை அடுத்த அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில் பாதையில் நடைமேடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை..!
சென்னை அடுத்த அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில் பாதையில் நடைமேடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை..!
சென்னை அடுத்த அம்பத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை நோக்கிச் செல்லும் விரைவு ரயில் பாதையில் நடைமேடை இல்லாததால்..,தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சிட்கோ, டாஸ் போன்ற தொழிற்பேட்டைகள் மற்றும் ஐ.டி. பூங்காக்களில் பணிபுரிபவர்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை சென்ட்ரல்/பீச் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச் செல்லும் அனைத்து உள்ளூர் விரைவு ரயில்களும் அம்பத்தூரில் நிற்கின்றன.ஆனால் சென்னை நோக்கிச் செல்லும் உள்ளூர் விரைவு ரயில்கள் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நிற்காததால், பயணிகள் திருநின்றவூர் அல்லது வில்லிவாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் இறங்கி, பின்னர் பேருந்து அல்லது உள்ளூர் ரயிலில் அம்பத்தூருக்கு வர வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. இதனால் ரயில் பயணிகளுக்கு பயண நேரம் மற்றும் பயணச் செலவு அதிகரிக்கிறது.
அம்பத்தூர் ரயில் நிலையம் மத்திய ரயில்வே துறையின் “அம்ரித் பாரத் ரயில் நிலையம்” திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்னக ரயில்வே அதிகாரிகள் நான்காவது நடைமேடையை அமைத்து, உள்ளூர் விரைவு ரயில்களை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
மேலும் 2019 ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே ஏலகிரி விரைவு ரயிலுக்கு அம்பத்தூரில் சோதனை நிறுத்தம் வழங்கியது. ஆனால் நடைமேடை நீளம் இல்லாத காரணத்தால் நடைமேடை நீளம் நீடிக்கபட்ட பின்னரே நிறுத்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நடைமேடை எண் 2 மற்றும் 3 ஆகியவை 24 பெட்டிகளை கையாளும் திறன் கொண்டவையாக உள்ளது…பலமுறை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் ரயில்வே வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடைமேடை எண் 2 மற்றும் 3 விரிவாக்கம் ஏலகிரி விரைவு ரயிலுக்காகவே செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதன் மூலம் அம்பத்தூர் மக்கள் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். ஆகவே தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
சரவணன்.ல.
தலைவர்,
அம்பத்தூர் ரயில் பயணிகள் நலச்சங்கம்..