திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பெற்றோர் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கொலை செய்து எரித்த காதலன் கைது…!
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பெற்றோர் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கொலை செய்து எரித்த காதலன் கைது…!
திண்டுக்கல், தருமத்துப்பட்டி – பன்றிமலை சாலையில் அமைதிசோலை பகுதியில் நீரோடையில் கடந்த 13-ம் தேதி இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் கன்னிவாடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது இளம்பெண் மாரியம்மாள் என்றும்(22) மதுரையில் ஆசிரமத்தில் வளர்ந்தவர். சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்ததாகவும், இதனால் இரண்டு முறை கர்ப்பம் அடைந்ததாகவும் அதனால் தன்னை திருமணம் செய்து கொள்வதால் மாரியம்மாள் பிரவீனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாரியம்மாளை காதலன் பிரவீன் அமைதி சோலை அருகே அழைத்துச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் பிரவினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்…