திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்..!
- திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்..!
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தில் 12 -03-2025 புதன்கிழமை, திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், திருப்பத்தூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை, தூய நெஞ்சக் கல்லூரி சமூக பணித்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.திருப்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பெருமாள்சாமி அனைவரையும் வரவேற்றார், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பாஸ்கர், செல்வராஜ், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர் வேலு முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன், கிராம நிர்வாக அலுவலர் மு.அரவேந்தன்,உடற்கல்வி ஆசிரியர் தண்டபாணி மற்றும் சமூக ஆர்வலர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கண் சிகிச்சை முகாமில் 100 கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்… 25 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் திருப்பத்தூர் ரோட்டரி சங்க செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.