Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறை பகுதியில் பகுடுபட்டில் பள்ளி வாகனம் விபத்து…!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறை பகுதியில் பகுடுபட்டில் பள்ளி வாகனம் விபத்து…!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறை பகுதியில் பகுடுபட்டில் ஞான தீபம் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு
முடவன் கோயில் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த போது அத்திரிபற்றி என்னும் இடத்தில் அதிவேகமாக வந்த பள்ளி வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கல் சுவற்றில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து… விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 20 பேரில் ஒரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி மீதமுள்ள 19 குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர்.
அனைத்து குழந்தைகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. விபத்து குறித்து தகவல் அறிந்த திமுக ஒன்றிய கழகச் செயலாளர் டி.சி.சிவராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் ரொட்டி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்…சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஜேசிபி இயந்திரம் சாலையில் இருந்த பள்ளி வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது…
மாவட்ட செய்தியாளர்
மாதேஸ்வரன்