கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டும் என கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவரை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கு விரிவுப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது… ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்…