கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்,கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

கோரிக்கை மனுவில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இறப்பு, இரட்டை பதிவு மற்றும் முகவரி தெரியாத வாக்காளர்கள் பெயர்களை நீக்கம் செய்தல் தொடர்பாகவும், கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு பிரிவு சாலையின் நடுவில் புதிதாக உயர்மின் விளக்கு அமைக்க போடப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சாலையில் ஒரு அடி உயரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் கோவை சாலையில் இடதுபுறம் உள்ள வாய்க்கால் பாலத்தின் அருகே சாலை மற்றும் அதன் ஓரங்களில் குழிகளாக உள்ளது. மேற்சொன்ன அவற்றில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கான்கிரீட் தளம் மற்றும் குழிகளில் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே, மேற்சொன்ன குழிகள் மற்றும் கான்கிரீட் தளத்தினை சரி செய்து உயர்மின் விளக்குகள் அமைக்கவும், இல்லையெனில் அந்த கான்கிரீட் தளத்தை அகற்றிவிட்டு கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு பிரிவு சாலையை சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.