திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்…!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்…!
தமிழ்நாடு முழுவதும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 2025, 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட வனசரகர் சோழராஜன் வழிகாட்டுதலின்படி, வனவர் தயாநிதி ஒருங்கிணைப்பில் பறவைகள் கணக்கெடுப்பு பஞ்சனம்பட்டி ஏரிக்கரையில் நடைபெற்றது….கண்டெடுப்பு பணியின் போது
30 க்கும் மேற்பட்ட ஈரநில பறவைகள் கண்டறியப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரிதான நீர்ப்பறவைகளான அன்றில் பறவை, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் கொக்கு, வெண்மார்பு மீன்கொத்தி, கொண்டதலை வாத்து, புள்ளி மூக்கு வாத்து, ஆட்காட்டி பறவை, வாத்து உள்ளிட்ட ஈரநில பறவைகள் கண்டறியப்பட்டன… 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் பறவை ஆர்வலர்கள் கிரீன் கமிட்டி மாவட்ட உறுப்பினர் சத்யராஜ், சித்த மருத்துவர் விக்ரம் குமார்,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், புகைப்படக் கலைஞர் திருமலைவாசன், சமூக ஆர்வலர்கள் ராம்குமார்,சையத் சபீர்அகமத், திருப்பத்தூர் சரக வனக்காப்பாளர்கள் முருகன்,வேலு உள்ளிட்ட ஏராளமான பறவை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்…