தென்காசி மாவட்டம் துத்திகுளம் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா அறிவியல் கண்காட்சியை டாக்டர் புஷ்பலதா தொடங்கி வைத்தார்…
தென்காசி மாவட்டம் துத்திகுளம் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா அறிவியல் கண்காட்சியை டாக்டர் புஷ்பலதா தொடங்கி வைத்தார்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திக்குளம் இந்து நடுநிலைபள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா நடைபெற்றது… இவ்விழாவிற்கு ஆலங்குளம் டாக்டர் புஷ்பலதா ஜான் தலைமை வகித்து அறிவியல் தின கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்…பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் வரவேற்று பேசினார்…இவ்விழாவில் அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் ஒளி நிறப்பிறகை அடைதலை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுவதை நினைவு கூர்ந்து பேசினார். மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் தினவிழா போட்டியில் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர் சஞ்சய், ஏழாம் வகுப்பு மாணவர் ரஞ்சித், மாணவி சரண்யா ஆகியோருக்கு டாக்டர் புஷ்பலதாஜான் பரிசுகள் அளித்து பாராட்டினார். விழா இறுதியில் அறிவியல் ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார். தேசிய அறிவியல் தின கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.இதில் காற்றுக்கு எடை உண்டு,நீரின் அடர்த்தி, எரிமலை குழம்புகள், ஹைட்ராலிக் மூலம் இயந்திரங்கள் இயங்குவது. தொடர் இணைப்பு பக்க இணைப்பு, மூலிகை செடிகளின் மருத்துவ குணங்கள், ஆரோக்கியமான உணவுகள், கேடு விளைவிக்கும் உணவுகள், சூரிய ஒளியை கொண்டு இயங்கும் வீடு, பண்டைய உணவு வகைகள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழல் காப்போம், மக்கும் குப்பை மக்காத குப்பை போன்ற பல அறிவியல் சார்ந்த படைப்புகளை மாணவர்கள் விளக்கி காட்டினர். இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோஸ்பின் தெரசா, ரோஸி, சத்யா, செல்வம், ஸ்டீபன், அருள்கனி, மேனாள் மாணவி கீதாஞ்சலி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இக்கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.