கும்பகோணம் :; சென்னையைச் சேர்ந்த சேகர் (67) 03-02-25 திங்களன்று ஆன்மீகப் பயணமாக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்களை தரிசித்து விட்டு திருப்பதி-ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏறும் பொழுது மறதியாக தான் வைத்திருந்த ஐபோன், டெபிட் கார்டு UAE ID ஆகியவற்றை தான் அமர்ந்திருந்த இடத்திலே விட்டுச் சென்று விட்டார். ரயில் தஞ்சாவூர் நெருங்குவதற்கு முன்பாக கும்பகோணம் தொடர்வண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் N.ஜெகதீசன் சேகர் தவறவிட்ட பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்று(6-2-25- வியாழன்) சேகரை நேரில் வரவழைத்து உதவி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகதீசன் பொருட்களை ஒப்படைத்தார்..இழந்த பொருள்களை பெற்றுக் கொண்ட சேகர் ரயில்வே காவல்துறைக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகதீசனுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
கும்பகோணம் :;
சென்னையைச் சேர்ந்த சேகர் (67) 03-02-25 திங்களன்று ஆன்மீகப் பயணமாக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்களை தரிசித்து விட்டு திருப்பதி-ராமேஸ்வரம்
செல்லும் ரயிலில் ஏறும் பொழுது மறதியாக தான் வைத்திருந்த ஐபோன், டெபிட் கார்டு UAE ID ஆகியவற்றை தான் அமர்ந்திருந்த இடத்திலே விட்டுச் சென்று விட்டார். ரயில் தஞ்சாவூர் நெருங்குவதற்கு முன்பாக கும்பகோணம் தொடர்வண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் N.ஜெகதீசன் சேகர் தவறவிட்ட பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்று(6-2-25- வியாழன்) சேகரை நேரில் வரவழைத்து உதவி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகதீசன் பொருட்களை ஒப்படைத்தார்..இழந்த பொருள்களை பெற்றுக் கொண்ட சேகர் ரயில்வே காவல்துறைக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகதீசனுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.