கும்பகோணம் காந்தியடிகள் சாலை ராயா மஹாலில் நடைபெற்ற அகில இந்திய சௌராஷ்டிரா மத்ய சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
கும்பகோணம் காந்தியடிகள் சாலை ராயா மஹாலில் நடைபெற்ற அகில இந்திய சௌராஷ்டிரா மத்ய சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
இந் நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்,மாநகராட்சி துணை மேயர், திமுக மாநகர செயலாளர் சுப.தமிழழகன் ஆகியோர் கலந்துகொண்டு சௌராஷ்ட்ரா மத்ய சபைக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட T.R.சுரேந்திரன் மற்றும் கும்பகோணம் திமுக மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.அனந்தராமன் (சபை செயலாளர்),ராஜன் (சபை நிர்வாக குழு உறுப்பினர்) உட்பட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் முருகன்,ராஜேந்திரன்,சங்கர்லால், ராமசுப்பிரமணியம்,ஸ்ரீராம் சேகர், ராயா.சீனிவாசன், ஸ்ரீமத் ஸ்ரீ ஸ்ரீ ராம அப்ரமேய ஸ்ரீ ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மத்திய,மாநில உயர் பொறுப்பாளர்கள், சௌராஷ்ட்ரா சமூக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் T.S.ரவிசன் நன்றி கூறினார்….