கும்பகோணம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது .
கும்பகோணம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில்
தலைமை ஆசிரியர் அ.சண்முக வடிவு வரவேற்புரை வழங்கினார்.
ஆசிரியர்
ரெ.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்…விழாவில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்
தலைமை ஏற்று, நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட,மலரை மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர் பெற்றுக் கொண்டார். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி
சிறப்புரையாற்றினார்..இந்நிகழ்வில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.விழாவில்
தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் வை.சாரதி, கும்பகோணம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராமலிங்கம்,ஆசிரிய பயிற்றுநர்கள் ராதாகிருஷ்ணன், விஜிதா மற்றும் முன்னாள்,இந்நாள் ஆசிரிய பெருமக்களும், மாணவிகளும், பெற்றோர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சி நிறைவில் க.வெங்கட சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியை தமிழாசிரியர்கள் K.சந்தான லட்சுமி G.கலைச்செல்வி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் நன்கொடையாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
தலைமை செய்தியாளர் JDPN