கும்பகோணம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா…!
கும்பகோணம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா…!
கும்பகோணம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா,117 ஆம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவியர் சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கே.ரமேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினைப் பெற்றவரும் பள்ளியின் முன்னாள் மாணவியுமான தலைமை ஆசிரியர் கா.லதா முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்…சிறப்பு விருந்தினராக கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியின் செயலர் பி.ஆர்.பி வேலப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.முதுகலை வரலாற்று ஆசிரியை கே.ஜெயலக்ஷ்மி பள்ளி ஆண்டு அறிக்கையினையும், முன்னாள் மாணவியர் சங்க செயலர் எம்.இந்திரா அச்சங்கத்தின் ஆண்டு அறிக்கையினையும் வாசித்தனர்.முன்னாள் மாணவியர் சங்கத்தின் சார்பில் படிப்பில் சிறந்த ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின…நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவியர் சங்க தலைவர் டி.மாலினி நன்றி கூறினார்…