கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 – வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது….
கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 – வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்திலுள்ள ஒன்றிய,நகர,பேரூராட்சி,வார்டு,பகுதி,கிளை கழகங்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.. தொடர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கழக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பேரறிஞர் அண்ணா,எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்…