Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. .
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து எதிரியை கண்டுபிடித்தமைக்காகவும்,POCSO வழக்கில் துரிதமாக செயல்பட்டு விசாரணை செய்து மிக விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தமைக்காகவும், திருப்பத்தூர் நகர பகுதியில் வாகன தணிக்கை செய்யும்போது காரில் கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தது போன்ற மெச்ச தகுந்த பணிகளை செய்த மாவட்ட காவல்துறையினர் 37 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.