Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்மதம்

வங்காளத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மதுரையில் போராட்டம்; 320 நபர்கள் கைது…!

வங்காளத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மதுரையில் போராட்டம்; 320 நபர்கள் கைது…!

மதுரை: வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து,வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் புதன்கிழமையன்று (டிச.4) போராட்டம் நடந்தது.அதன் ஒரு பகுதியாக,மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புதன்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் ராஜேஷ் கண்டன உரையாற்றினார்.உடன் பூஜனிய சுவாமிகள் வேதாந்தானந்தா,பிரம்மானந்த ஜி மகாராஜ்,ஜிதேஷ் சைதன்ய மகாராஜ் மற்றும் ஆன்மீக இயக்கங்கள்,ஆர். எஸ்.எஸ்,அனைத்து இந்து இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஹரிஹரன், ராஜரத்தினம், சசிகுமார்,கார்த்தி பிரபு,ராஜ்குமார்,இந்து ஆலய பாதுகாப்பு மாநில பொருளாளர் ஆதிசேஷன்,மாவட்ட மக்கள் சேவை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.என்.ஆதிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 320 நபர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்று மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button