Uncategorizedஉள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று… இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை,ஆவணி, மார்கழி,மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்கழி திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று… இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை,ஆவணி, மார்கழி,மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மார்கழி திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஜன 12 ல் நடக்கிறது.
இதையொட்டி இன்று காலை 07.30 மணி அளவில் முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு வைபவம் துவங்கியது. தொடர்ந்து மேளதாளத் துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு கால் நாட்டு வைபவம் நடந்தது.குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன்,கணக்கர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர்,அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,பேரூர் செயலாளர் சுதை சுந்தர்,கிளை செயலாளர் அழகு தாமோதரன்,மகளிரணி சைலா ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button