திண்டுக்கல் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பணம் பறித்தவர்களை பிடிக்க சென்ற போலீசாரிடம் தப்ப முயன்ற 2 வாலிபர்கள் கீழே விழுந்து கால் எலும்பு முறிவு – தாலுகா போலீசார் மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதி..!
திண்டுக்கல் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பணம் பறித்தவர்களை பிடிக்க சென்ற போலீசாரிடம் தப்ப முயன்ற 2 வாலிபர்கள் கீழே விழுந்து கால் எலும்பு முறிவு – தாலுகா போலீசார் மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதி..!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டபிரபு(36) ஆட்டோ ஒட்டி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக திண்டுக்கல்லில் வேலை கிடைக்கும் என்று வந்தவர் வேலை கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரிடம்
தங்கப்பாண்டி(21), நித்தியானந்தம்(21) ஆகிய இருவரும் சிறுமலையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பொன்னகரம் பகுதியில் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தி,கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன்,சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் மணிகண்ட பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு பொன்னகரம் அருகே உள்ள புதர் பகுதியில் பதுங்கி இருந்த தங்கப்பாண்டி மற்றும் நித்தியானந்தம் ஆகிய 2 பேரை பிடிக்க சென்ற போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓட முயற்சி செய்தபோது கீழே விழுந்து இருவருக்கும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தாலுகா காவல் நிலைய போலீசார் இருவரும் குற்றவாளிகள் என்று பாராமல் மனிதாபிமான அடிப்படையில் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.