ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் நகரம் ஒன்றியத்தில் 8.10.2024 அன்று (செவ்வாய்க்கிழமை )காலை 09:00 மணிக்கு சிறப்பு தேவை உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மேம்பாலம் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது….!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் வழிகாட்டுதலின் படி தஞ்சாவூர் நகரம் ஒன்றியத்தில் 8.10.2024 அன்று (செவ்வாய்க்கிழமை )காலை 09:00 மணிக்கு சிறப்பு தேவை உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மேம்பாலம் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.வட்டார கல்வி அலுவலர் அம்பிகா மற்றும் மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்,மனநல மருத்துவர்,காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கினர்…மேலும் முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு UDID நலவாரியம்,கல்வி உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்களுக்கு பதிவு செய்யப்பட்டது. முகாமில் 320 பயனாளர்கள் கலந்து கொண்டனர் 0 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவப் பயனாளர்கள் 133 நபர்களும்,18 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்கள் 187 நபர்களும் கலந்து கொண்டனர்.புதியதாக மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை 93 மாணவர்களுக்கும், பெரியவர்களில் 62 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேநீர்,சிற்றுண்டி,மதிய உணவு மற்றும் போக்குவரத்து பயணப்படி வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஷெனட் ஷோபா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்,இயன் முறை மருத்துவர் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்…..