அரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தீபாவளி திருநாளன்று சட்டத்திற்கு விரோதமாக அரசு மதுபான கடை பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை போராட்டம்…

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தீபாவளி திருநாளன்று சட்டத்திற்கு விரோதமாக அரசு மதுபான கடை பாரில் மது விற்பனை செய்ததை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் பாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து முக்கு சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மதுபான கடை (3428) மதுபானம் கூடாரம் (பாரில்) தீபாவளி திருநாளன்று 31.10.24 சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்து வந்ததை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னால் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து,நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மது அறிந்தகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட்டதால் தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,அங்கு விற்பனை செய்த நபர்களையும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது,
அதே போல் ரெட்டாராவலசு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை கண்டித்தும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்,பார் அருகே மது போதையில் கீழே விழுந்த நபர் இறந்து விட்டார் என தகவல் அறிந்த 108 ஊர்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மது போதையில் கிடந்த நபரை மீட்டெடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button