திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், குறும்பேறி ஊராட்சி யில் இரவு முழுக்க பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரியின் தரைப்பாலம் உடைப்பு…!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், குறும்பேறி ஊராட்சி யில் இரவு முழுக்க பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரியின் தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீதிகளில் செல்வதால் தரைப் பாலத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் நகர் பகுதிக்கு செல்லவும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கலர்பதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து மேம்பால சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்…மேலும் அங்கு உள்ள குடிநீர் தொட்டி அருகே நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கி நின்றது அதற்கு கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றிடும் பணியை உடனுக்குடன் செய்தார். நீண்ட கால கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றியதால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்…