திருப்பத்தூர் ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் (18.10.2024) ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும், ஆன்லைன் கேம் மூலம் ஏற்படும் உயிர்சேதம்,பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும்,தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவல்ல என்பது பற்றியும்,ஆன்லைன் குற்றங்கள் மற்றும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சமீபத்திய சைபர் குற்றங்களின் செயல் முறைகள் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் இணையவழி குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- மேலும் இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 1930-யை தொடர்பு கொள்ளலாம் எனவும் சைபர் குற்றங்களை பற்றிய புகாரை https://www.cybercrime என்ற இணையதள முகவரி மூலமும் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.