குமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவிற்கு, யானை பயன்படுத்துவது வழக்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை…!
கன்னியாகுமரி மாவட்ட தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் 490 திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பாரம்பரிய முறைப்படி விழாக்கள் நடத்த 1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த போது ஐந்து யானைகள் வாங்கப்பட்டது. இந்த யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக நோயால் இறந்தன. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குழித்துறை கோபாலன் யானையும் இறந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் யானைகள் வாடகைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்ககில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வந்தனர்.
யானையின் உரிமையாளர்கள் முறையான லைசன்ஸ் பெறாமலும்,
பருவ கால தடுப்பூசிகள் போடாமல் யானைகள் பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வனத்துறை கடும் கட்டுப்பாடு விதித்தது. இது தவிர திருவிழா நேரங்களில் யானைகளால் ஏற்படும் விபத்துக்கள், நீதிமன்றகளில் உள்ள பொது நல வழக்குகள் யானைகள் பயன் படுத்துவதில், திருவிழா காலங்களில் சிக்கல் எழுந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து யானை கொண்டு வருவது பெரும் பொருட் செலவாகும். இந்நிலையில் பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி பரிவேட்டை திருவிழா நடந்து வருகிறது. பாரம்பரிய முறைப்படி திருவிழாவில் யானை பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால்,பல தரப்பு பிரச்னை காரணமாக யானை வருவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதற்கிடையில், குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முயற்சியில் வெளி மாவட்டத்தில் இருந்து கோயில் யானை கொண்டு வர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இது குறித்து குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கூறுகையில்,குமரி மாவட்டத்திற்கு தனியாக ஓர் யானை வேண்டும் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளதாகவும். மேலும் துறை ரீதியாகவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும்..குமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவிற்கு, யானை பயன்படுத்துவது வழக்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் உத்தரவு பெற்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள யானைகளில் ஏதேனும் ஒன்றினை தற்சமயத்திற்கு பயன்படுத்த கேட்டுள்ளோம். இதற்கு அனுமதி பெற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் தலைமையில் அதிகாரிகள் சென்னை தலைமை ஆணையர் அலுவலகத்தில் உத்தரவு ஆணையும், வனத்துறையிடம் அனுமதி பெறவும் முயற்சித்து வருகின்றனர்.ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும்.உடல் தகுதியின் அடிப்படையில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணசாமி கோவிலில் உள்ள கோமதி பெண் யானை வரவழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ” என்றார்…
==