தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என மனித வள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜிடம் நேரில் ஓட்டுநர்கள் கோரிக்கை மனு அளித்தனர்…!
தாராபுரம்: தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என
மனித வள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜிடம் நேரில் ஓட்டுநர்கள்
கோரிக்கை மனு கொடுத்தனர்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜின் முகாம் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக சென்னை,மதுரை,கோவை,திருப்பூர்,திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38-மாவட்டங்களில் இருந்து அரசு ஊர்தி ஓட்டுநர்கள்
70-பேர் மாநிலத் தலைவர்
பா.பச்சையப்பன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் மு.தனபாலன்,மாநில பொருளார் பை.முருகன்,திருப்பூர் மாவட்ட செயலாளர் தம்புராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் க்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனுவினை கொடுத்தனர். இதில் ஆண்-பெண் ஓட்டுநர்கள் இருபாலரும் கலந்து கொண்டனர்.
அந்த மனுவில்
அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
தலைமை செயலகத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டும் பதவி உயர்வு (உதவியாளர் Assistant) ஆக பதவி பணி மாறுதலுக்கான அரசாணை உள்ளன. அதில் அவர்கள் பயன் அடைந்து கொண்டும் இருக்கின்றனர்.
தலைமை செயலகத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு பதவி (பணி) மாறுதல் நிலைபோல மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்களுக்கும், கல்வி தகுதியின் அடிப்படையில் குறைந்தது ஏதேனும் % (சதவீதம்) விழுக்காடுகளாவது வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் பணி (பதவி) மாறுதல் நிலையை வழங்குமாறும் மேலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள்,வழங்கிடவும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடங்களை
காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளனர்… உடன் மாநில தணிக்கையாளர்கள் திருப்பூர் ரகுபதி, லட்சுமணன்,சேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.