குமரி திமுக கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி…!
குமரி திமுக கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு மாவட்ட அமைப்பாளர் இ.என்.சங்கர் தலைமையில் இறச்சகுளம் அம்பலம்திருத்தி பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். நிகழ்வில் மாநில பேரவை செயலாளர் தில்லை செல்வம் மாவட்ட துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ்,ஒன்றிய செயலாளர் செல்வம், இந்து அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன்,விவசாய அணி அமைப்பாளர் தம்புரான்,மாநகர அமைப்பாளர் சிதம்பரம்,தொ.மு.ச இளங்கோ வள்ளுவன், மகளிர் தொண்டரணி லதா கலைவாணன், மாணவரணி அருண்காந்த், பஞ்சாயத்து தலைவர்கள் மகேஷ், ஏஞ்சல் ஆலிவர் தாஸ், கல்யாணசுந்தரம், பேரூர் செயலாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்….