விருது பெற்ற ஆசிரியர்களே சிறந்தவர்கள் என நினைப்பது தவறு : தேசிய விருதாளர் பேச்சு….!
விருது பெற்ற ஆசிரியர்களே சிறந்தவர்கள் என நினைப்பது தவறு : தேசிய விருதாளர் பேச்சு.
கும்பகோணத்தில் 10.09.24 செவ்வாய்க் கிழமை முற்பகல் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாக் கூட்டம் கோவிந்தன் மகாலில் வட்டாரத் தலைவர் துரைராசு தலைமையில் நடைபெற்றது… சொ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்…
கல்லூரி ஆசிரியர் சங்கத்தலைவர் பேராசிரியர்
ச.மணி,நகர மே.நி.பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ப.சௌந்தரராசன் உட்பட பலரும் ஆசிரியர்களை வாழ்த்திப் பேச,சங்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
ஏற்புரையாற்றிய தேசிய விருதாளர் முனைவர் மு.செல்வசேகரன் ,
” விருது பெற்ற ஆசிரியர்களே சிறந்தவர்கள் என நினைப்பது தவறு.விருது கிடைக்கப்பெறாமலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிற ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.இந்த சங்கம் வேறுபாடின்றி தேசிய விருதாளர்கள் பாலசுப்பிரமணியன்,பன்னீர்செல்வம் உட்பட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பலரையும் அழைத்துச் சிறப்புச் செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது”
என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.இராசகோபாலன் சிறப்புரையாற்ற வட்டத் துணைத்தலைவர் சாரங்கன் நன்றி கூறினார்.