உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள பாதுகாப்பு குறித்தும் சிலை கரைக்க உள்ள பள்ளிப்பட்டு ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து ஆம்பூர் பகுதியில் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள பாதுகாப்பு பணியும் சிலை கரைக்கக் கூடிய பகுதிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வாணியம்பாடி பகுதியில் டிஎஸ்பி விஜயகுமார் நகர ஆய்வாளர்,
ஆம்பூர் பகுதியில் டிஎஸ்பி அறிவழகன், நகர காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்.