திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கோனேட்டி கிணறு பகுதியில் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கொண்டாட்டம்…!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கோனேட்டி கிணறு பகுதியில் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கொண்டாட்டம்…!
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் உள்ள மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கோனேட்டி கிணறு பகுதியில் எல்லையம்மன், காளியம்மன், நாகாலம்மன்,
கிருஷ்ணர்
கோயில்கள் உள்ளன.
ஆடி வெள்ளியை முன்னிட்டு எல்லையம்மன், காளியம்மன், நாகாலாம்மன்
கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மிட்டாளம், வன்னியநாதபுரம், குட்டகந்தூர், பைரப்பள்ளி, மேல் மிட்டாளம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஜெயராமன் , சரவணன், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்…