மதம்
17 அடி கருப்பசாமி சிலை..
பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரமாண்ட கருப்பசாமி சிலை!
பழனி மலை அடிவாரத்திற்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது. பல்வேறு சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பசாமி சிலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
தற்போது விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் இந்த பிரமாண்ட சிலை கயிறு கட்டி கிரேன் மூலம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது.