குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (04.01.25) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருவிழா வருகிற ஜன.13 வரை 10 நாட்கள் நடக்கின்றன.இன்று மாலை 04.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம்,தாளம்,வெடிமுழக்கத்துடன்,முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணனனிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் கோயில் மேலாளர் ஆறுமுகதரன்,கணக்கர் கண்ணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்…
குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (04.01.25) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருவிழா வருகிற ஜன.13 வரை 10 நாட்கள் நடக்கின்றன.இன்று மாலை 04.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம்,தாளம்,வெடிமுழக்கத்துடன்,முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணனனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் கோயில் மேலாளர் ஆறுமுகதரன்,கணக்கர் கண்ணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்…