உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரணி..!!
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரணி!!
திருப்பத்தூர் மாவட்ட நகராட்சி அலுவலகத்திலிருந்து இன்று 22/12/2024, காலை 10:00 மணி அளவில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில்
தொடங்கிய பேரணி,வட்டாட்சியர் அலுவலகம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் வழியாக சார் ஆட்சியர் அலுவலகம் அருகே முடிவடைந்தது…
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்,மாநில ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், முன்னிலை வகித்தார்,மாவட்ட தலைவர் மு.தமிழ்தாசன் சிறப்பு உரையாற்றினார்.. மாவட்ட செயலாளர் ஜா.விமல் வரவேற்புரை ஆற்றினார்…
இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் பொ.வே.ஆனந்த கிருஷ்ணன்,வழக்கறிஞர் மணிமொழி,ஆர்.ஜி வெங்கடேசலம்,ஓசை விஜி,முத்தமிழ் பேரவையின் சீனிவாசன்,ரகுபதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்… பேரணியின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…. 1.செம்மொழி தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக வேண்டும், 2.திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்,3.சென்னை & மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்….