குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி நிறுவனமான “தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்” மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத் துறையுடன் இணைந்து நடத்தக்கூடிய பயிற்றுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி :: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி 16.12.2024 அன்று வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது…

நிகழ்ச்சியை முனைவர் ஸ்ரீதரன்,முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், அதனை தொடர்ந்து புவனா குணசேகரன்,வேலூர் மாவட்ட திட்ட மேலாளர்,தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினார்… தொடர்ந்து சிமியோன்ராஜ் திட்ட மேலாளர் முதன்மை பயிற்றுனராக இருந்து கீழ்க்கண்ட திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்…எம்.எஸ்.எம்.இ (MSME) திட்டங்கள்,தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்டங்கள்,புத்தாக்கப்பற்று சீட்டு ஏ மற்றும் பி, இ.டி.ஐ.ஐ ஹேக்கத்தான், அறிவுசார் சொத்துரிமைகள், ஓராண்டு தொழில் முனைவோர் பட்டய படிப்பு,தொழில் முனைவோர் ஆவதற்கான கட்டண திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.
பயிற்சியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்…பயிற்சி பெற்ற ஆசிரிய பெருமக்கள் தங்கள் கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்…
தலைமை செய்தியாளர்
பாலமுரளி