கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57வது தேசிய நூலக வார விழா தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை தேவபாண்டலம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது….
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57வது தேசிய நூலக வார விழா தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை தேவபாண்டலம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார்,வாசகர் வட்டத் தலைவர் இராசு.தாமோதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்,வாசகர் வட்ட துணைத்தலைவர் மு.முருககுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்,பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னம்மாள்,அரிமாசங்கத் தலைவர் குமார் அ.பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராஜன்,அரிமா மாவட்டத் தலைவர்கள் க வேலு,தண்டபாணி, வாசகர் வட்ட பொருளாளர் எஸ்.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்…சிறப்பு விருந்தினராக சுங்கம் மற்றும் மத்திய கலால்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், கடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன்,ஆனந்தராசு, இராமு,சுபா,சக்தி பாலா,சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் தலைவர் சுபாஷினி ரமேஷ்,தீபா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. விழாவின் முடிவில் நல்நூலகர் மலர் கொடி நன்றியுரையாற்றினார்…