திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், KAAVAL UTHAVI APP, போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…..
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், KAAVAL UTHAVI APP, போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், KAAVAL UTHAVI APP, போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், இணையவழி மோசடி பற்றியும், காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து இன்று (25.11.2024) திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா தலைமையில் ஆதியூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.