வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அத்தி நரசிம்மர் கோவில் சிலை காணாமல் போனதை தொடர்ந்து சிலையை மீட்டெடுக்க அகில் பாரத் இந்து மகா சபா விரைவில் ஆர்ப்பாட்டம்…!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அத்தி நரசிம்மர் கோவில் சிலை காணாமல் போனதை தொடர்ந்து சிலையை மீட்டெடுக்க அகில் பாரத் இந்து மகா சபா விரைவில் ஆர்ப்பாட்டம்…!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் எண் 29 நரிமுருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமானுஜக்கூடம் அன்னதான சத்திர பஜனை கோவிலில் சுமார் 50 ஆண்டு பழமையான அத்தி நரசிம்மர் சிலையை கடந்த 31.03.2025 அன்று சில மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து சிலையை அகற்றியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அகில பாரத் இந்து மகா சபா தமிழக மாநில தலைவர்,சென்னை வழக்கறிஞர் ரமேஷ்பாபுவின் ஆலோசனையின்படி குடியாத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.சதீஷ்குமார் என்பவருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றத்தை அணுகி முறையாக அகில பாரத் இந்து மகா சபா கட்சியின் தலைவர் ரமேஷ் பாபு கடந்த வாரம் ரிட் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்…மனுவை விசாரித்த நீதிபதி மனுவை பரிசீலனை செய்து ரிட் மனுவின் தகுதிகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மனுதாரர் சமர்ப்பித்த பிரதிநிதித்துவத்தின் மீது விசாரணை நடத்தி, இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் தகுதி மற்றும் சட்டத்தின்படி உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மூன்றாவது பிரதிவாதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தொடர்ந்து இத்திருக்கோவிலுக்கு சொந்தமான அத்தி நரசிம்மர் சிலையை மீட்டு திருக்கோவிலில் ஒப்படைக்க வேண்டி விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ரமேஷ் பாபு அறிவிப்பு…..