குமரியில் போலி ஆவணம் மூலம் பள்ளிகளில் வசூல் வேட்டை…
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு குறும்படம் போட்டு மாணவர்களுக்கு காண்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரின் போலியான கையொப்பமிட்டு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியின் ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி அனைத்து பள்ளிகளுக்கும் போலி கடிதத்தை அனுப்பி மாணவர்களிடம் இருந்து தலா ரூ.10 வசூல் செய்து பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவர் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மாவட்ட ஆட்சியரின் போலியான கையெழுத்துடன் கூடிய கடிதத்தை தயார் செய்து பத்து ரூபாய் முறைகேட்டில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் , எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது. போலியான ஆவணம் மற்றும் சீல் எங்கு தயார் செய்யப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல நாட்கள் மர்மமாக இருந்து வந்த ஆட்சியரின் போலி கையெழுத்து மற்றும் பத்து ரூபாய் பள்ளி கொள்ளை வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.