விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமையாளர்கள் உரிமை கோரிய வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள 19 நான்கு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கரவாகனங்கள், 98 இரண்டு சக்கரவாகனங்கள், ஆகமொத்தம் 119 வாகனங்கள் 12.02.2025 ம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு பொது ஏலம் நடைபெறவுள்ளது…
விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமையாளர்கள் உரிமை கோரிய வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள 19 நான்கு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கரவாகனங்கள், 98 இரண்டு சக்கரவாகனங்கள், ஆகமொத்தம் 119 வாகனங்கள் 12.02.2025 ம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு பொதுஏலம் நடக்கவிருக்கிறது. ஏலம் கோருவோர் ஏலதொகையுடன் விற்பனை வரியும் (ஜி.எஸ்.டி) சேர்த்து செலுத்தவேண்டும்.. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 12.02.2025 ம் தேதி காலை 09.00 மணிக்குள் முன்தொகையாக நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.5,000/- , இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2000/- செலுத்தி(டோக்கன்) பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளாம்…முன்பணம் ஏலத்தொகையில் கழித்துகொள்ளப்படும், ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் அன்றே திருப்பி கொடுக்கப்படும். ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் 7 தினங்களுக்குள் அலுவலகத்தில் செலுத்தி வாகனத்தை பெற்றுகொள்ள வேண்டும்.,மேலும் 7 தினங்களுக்குள் ஏலம் எடுத்தவர் முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை எடுக்க தவறும் பட்சத்தில் அந்த வாகனத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மறு ஏலத்திற்க்கு விட ஏதுவாகும் என்பதையும் அதர்க்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பதை இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது….
செய்தியாளர் K.முருகன்