திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகர் பகுதி டபேதார் முத்துச்சாமி தெருவில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகர் பகுதி
டபேதார் முத்துச்சாமி தெருவில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர். வீ.அன்புராஜ் கலந்துகொண்டு அலுவலகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்த அலுவலகத்தில் “பெரியார் அமைப்புசாரா தொழில்”,தினம் ஒரு பகுத்தறிவு சிந்தனை,”பெரியார் புத்தக விற்பனை நிலையம் மற்றும் நூலகம்..,
“மனநல ஆலோசனை மையம் மற்றும் மாவட்ட கழக அலுவலகம் உள்ளிட்டவை செயல்படும்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி சிவா,ஊமை ஜெயராமன்,பெரியார் செல்வம்,அகிலா எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..விழாவினை மாவட்ட திராவிடர் கழக தலைவர்
கே.சி. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது… மாவட்ட திராவிடர் கழக செயலர் கலைவாணன் வரவேற்புரை ஆற்றினார்… நிகழ்ச்சியில்
தி.க கட்சியை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்…